தொல்லை தரும் சோரியாஸிஸ்... வந்தா முழுசா குணப்படுத்திட முடியுமா? விளக்கும் சித்த பெண் மருத்துவர்
சோரியாஸிஸ் ஒரு நாள்பட்ட தோல் அழற்சி ஆகும். தோலின் மீதுள்ள சருமம் செதில் செதிலாக உறிய ஆரம்பித்து விடும்.
இது ஒரு ஆட்டோ இம்பினியூ டிஸ்ஆர்டர் என்பதால் சம்பந்தப்பட்டவரின் உடலின் எந்த பாகங்களில் வேண்டும் என்றாலும் சோரியாஸிஸ் வரலாம்.
இந்த நோய் இருபாலரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. எனவே இந்த நோயை விரட்ட உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் சரி செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சில உணவு வகைகள் உதவுகிறது.
இந்த உணவுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சரும அழற்சியை குறைக்கவும் உதவுகிறது. அந்த வகையில் இந்த சொரியாஸிஸ் என்றால் என்ன இது யாரையெல்லாம் தாக்கும்?
இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம்.