PSBB பள்ளியில் வன்கொடுமை சம்பவம்... நிர்வாகிகளின் மகன்களுக்கும் தொடர்பு! அம்பலமாகிய பகீர் உண்மை
சென்னையில் பிரபல பள்ளி ஆசிரியர் வன்கொடுமை சம்பவத்தால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் மகன்களுக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
சென்னை பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் ஆகியோர் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையல், இதில் கெவின் ராஜ் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜரான பள்ளி தாளாளர் ஷீலா, முதல்வர் கீதாவிடம் பொலிஸார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட 300 மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் என்ன பதில் சொல்ல போகிறது என்று இருவரிடமும் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்களும், குறித்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் அவர்களின் மகன்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து இந்த உண்மைகள் தெரியவந்துள்ள நிலையில், மேலும், ஆசிரியர்கள் இரண்டு பேர் அளித்த தகவலின் படி பள்ளி நிர்வாகிகளின் மகன்களிடம் விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
நேற்று விசாரணையின் போது, வயது வந்த மாணவிகள் படிக்கும் வகுப்பறையின் அருகே பாதுகாப்புக்காக சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? கடந்த 10 ஆண்டுகளில் 300 மாணவிகளுக்கு வன்கொடுமை தொந்தரவு கொடுத்தாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளாரே அதற்கு உங்கள் பதில் என்ன என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில், பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் அளித்த பதிலை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.