எந்தெந்த பழங்களில் எவ்வளவு புரதச்சத்து இருக்குதுனு தெரியுமா?
நமது உடம்பிற்கு புரதச்சத்தை அளிக்கும் பழங்கள் குறித்தும், அதில் எவ்வளவு புரதச்சத்து நமக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு தேவையான சத்துக்களில் மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து ஆகும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனது.
சுமார் 20 வெவ்வேறு அமினோ அமிலங்கள் இருப்பதாகவும், இவை தசை, எலும்புகள் உருவாக்கம் மற்றுமு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வசிக்கின்றது.
உடல் எடையைக் குறைக்கவும், உடலின் ஆற்றலுக்கும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் டயட் இருப்பவர்கள் புரதம் நிறைந்த உணவுகளையே எடுத்துக் கொள்கின்றனர்.
காலையில் எழுந்தவுடன் புரதச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு வலுவையும், சுறுசுறுப்பையும் அளிக்கின்றது.
தற்போது புரதச்சத்து எந்தெந்த பழங்களில் உள்ளது என்றும் எந்த அளவில் உள்ளது என்றும் தெரிந்து கொள்வோம்.
அவகேடோ – 1 கப்: 3 கிராம் புரதம்
கொய்யா – 1 கப்: 4 கிராம் புரதம்
கிவி – 1 கப்: 2 கிராம் புரதம்
மாதுளை – 100 கிராம்: 1.7 கிராம் புரதம
சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) – 100 கிராம்: 1.4 கிராம் புரதம்
கிரேப் புரூட் – 1 கப்: 1.3 கிராம் புரதம்
குழிப்பேரி (பீச்) – 1 கப்: 1 கிராம் புரதம்
வாழைப்பழம் – 1 கப்: 1.6 கிராம் புரதம்
செர்ரி – 1 கப்: 1.6 கிராம் புரதம்
இந்த பழங்களை உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |