மழைக்காலத்தில் போனை எவ்வாறு பாதுகாப்பது? பயனுள்ள டிப்ஸ் இதோ
மழைக்காலத்தில் உங்களது போனை பாதுகாப்பதற்கு சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மொபைல் போன் கையில் இல்லாத நபர்களை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. ஆம் அந்த அளவிற்கு மக்களின் அடிப்படை தேவையாகிவிட்டது மொபைல்.
சிறுவர்களும் மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப விலையும் அதிகமாகவே இருக்கும். ஆனால் போனில் தண்ணீர் சென்றுவிட்டால், நாம் செலவழித்த பணம் ஒன்றுமில்லாமல் போய்விடும்.
அதிலும் மழை காலங்களில் போன்களை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். தற்போது மழைக்காலத்தில் உங்களது போனை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மழைக்காலங்களில் போனை எவ்வாறு பாதுகாப்பது?
மொபைல் நீரில் நனைந்துவிட்டால் உடனே ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும்.
போனில் இருக்கும் மின்சுற்றைத் துண்டித்து, மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கமுடியும்.
பழதடைந்த போன்களை சரிசெய்வதற்கு, அரிசியில் புதைத்து வைப்பது மிக முக்கியமான செயலாகும்.
அரிசிக்குள் புதைத்து வைத்திருக்கும் செல்போனை உடனே எடுக்காமல், ஒரு இரவு அப்படியே விட்டுவிட்டு மறுநாள் எடுத்தால், மொபைலில் இருந்த ஈரப்பதம் அனைத்தும் காணாமல் போய்விடும்.
உங்களது மொபைல் போனிற்கு நீர் புகாத மொபைல் கவரை போடுவது சிறந்த தேர்வாக இருக்கும்.
மேலும் உங்களது மொபைல் போன் சற்று ஈரமாக இருக்கும் பொழுது அதனை சார்ஜ் செய்யாதீர்கள். இது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஈரப்பதத்தை அகற்றுவதற்கு ஹேர்டிரையரைப் பயன்படுத்து தவறான விடயமாகும். இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
நீங்கள் வாட்டர் ப்ரூப் ஹெட்செட் அல்லது வயர்லெஸ் இயர்போன்களை பயன்படுத்துவது சிறந்ததாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |