வயது தடையில்லை… சூப்பர் மேன் போல கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவும் 70 வயது ஹீரோ!
இந்த பெருந்தொற்று காலத்தில் வயது ஒரு தடை அல்ல என்று நிரூபித்து வருகிறார் ஆந்திராவை சேர்ந்த 70 வயதான கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் ராவ்.
மூத்த குடிமக்களுக்கு அல்லது தொற்று நோய் பாதிப்பு காரணமாக வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத எவருக்கும் மருந்துகள், மளிகை பொருட்கள், ரேஷன் உட்பட பிற அத்தியாவசி பொருட்களை வழங்க தனது சைக்கிளிலேயே சென்று உதவி செய்து வருகிறார்.
தன்னார்வலராக இருந்து வரும் ஸ்ரீனிவாஸ் ராவ், 70 வயதிலும் அசராமல் சைக்கிளில் சென்று தேவைப்படுவோருக்கு உதவிகளை செய்து வருவது பல்வேறு இளைஞர்கள் தன்னார்வலர்களாக மாறி உதவி செய்திட பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
Mr. Srinivas Garu ( 70 years old ) delivering the grocery for the covid patients ?
— ?? Relief Riders Hyderabad #ReliefRiders (@ReliefRidersHyd) June 28, 2021
A inspirational person with golden heart to serve the needy
Sir Srinivas Garu ?#communityservicebybicycle #ReliefRidersHyderabad ??@HiHyderabad@swachhhyd @arvindkumar_ias @KTRTRS pic.twitter.com/Vdqbv26Rl7
இது குறித்து அவர் கூறும் போது, துவக்கத்தில் தொற்று நோய்க்கு மத்தியில் தன்னார்வலராக நான் வெளியே செல்வது குறித்து தன் மனைவி மிகவும் பயந்ததாகவும், இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் தன்னை முழுமையாக புரிந்து கொண்டு தற்போது தனது முடிவுக்கு ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் இவரது பிள்ளைகள் தொற்று நேரத்தில் இவர் வெளியே சென்று சைக்கிளில் சுற்றி உதவிகளை செய்வது பாதுகாப்பானது இல்லை என்றும் இன்னும் கருதுவதாக கூறி உள்ளார்.
சிலர் தொற்று பாதிப்பின்றி கடைகளுக்கு செல்லும் நிலையில் இருந்தாலும் கூட, தங்கள் சேவைகளை தவறாக பயன்படுத்துவதை காண முடிவதாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற நபர்களை பார்க்கும் போது, நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறேன், வீடுகளை விட்டு வெளியேறி அவர்களின் தேவைகளுக்கு ஷாப்பிங் செய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கிறேன் என்கிறார்.
இதேவேளை, உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் ஸ்ரீனிவாஸ் ராவ் சிட்டி மற்றும் சிட்டி சுற்றிய பகுதிகளில் பயணிக்க சைக்கிளை பயன்படுத்துகிறார். தினமும் 2 மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார்.