இலங்கையில் முதன்முறையாக அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் முதன்முறையாக அடையாள அட்டை பெறும் போது சமர்பிக்க வேண்டிய தகைமைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
* இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
* 16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்
நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)
பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)
துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள்.
4 வர்ண புகைப்படங்கள் (13/8 x 7/8 அங்|)
முத்திரைக் கட்டணம்
• 16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரிகட்கு 3 ரூபா முத்திரை
• 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகட்கு 13 ரூபா முத்திரை.
திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.
தொழில்பற்றி குறிப்பிட வேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3மாதத்துக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
உதா :- மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற தொழிற்றகைமை தொடர்பில் பட்டதாரிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக).
ஆட்பதிவுத் திணைக்களம்.
10 வது மாடி,
சுஹுருபாய,
ஸ்ரீ சுபூத்திபுர வீதி,
பத்தரமுல்ல