அடிக்கடி மீன் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் விபரீத பிரச்சினைகள்; எப்படி சாப்பிடலாம்?
மீன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம். * தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம்.
இது இதயத்திற்கு இதமானது. * மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். * மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். * தினமும் ஏதாவதொரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.
* மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். * மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி போன்றவை மனநல பிரச்சினைகளை தடுக்க உதவும். * மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும் தடுக்கும்.
* முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
* மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
* தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடக்கூடாது