வடிகால் சுத்தம் செய்யும் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரர் ஆன பின்பும் அதே வேலையா?
இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு விழுந்த போதும் அதனை செலவு செய்யாமல் தனது பழைய வேலைக்கு திரும்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பெரும்பாலான நாடுகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகமாகவே இருக்கின்றது. ஏழ்மை நிலையில் இருக்கும் நபர்கள் லாட்டரி சீட்டுகளை அதிகமாக வாங்குவது வழக்கம்.
காரணம் தனது வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான். அது போன்ற சம்பவத்தையும், ஆனால் குறித்த நபர் கோடீஸ்வரரான பின்பு செய்யும் வேலையைக் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து இளைஞர் ஜேம்ஸ் க்ளார்சன். 20 வயதாகும் இவர் தினமும் வடிகால் சுத்தம் செய்யும் பணியினை குறைந்த சம்பளத்தில் செய்து வந்துள்ளார்.
க்ளார்சன் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்றினை வாங்கி வந்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக இந்திய மதிப்பிற்கு ரூபாய் 80 கோடி பரிசு விழுந்துள்ளது.
பொதுவாக இவ்வாறு லாட்டரி சீட்டு விழுந்து கோடீஸ்வரராக ஆகிவிட்டால், உடனே பலரும் தனது வாழ்க்கை தரத்தினை தான் மாற்றுவார்கள்.
ஆம் தனது கஷ்டத்திற்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டதாக நினைத்து, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுடன், புதிய தொழில் தொடங்கி முதலாளியாகக் கூட ஆகிவிடுவார்கள்.
ஆனால் குறித்த இளைஞர் இந்த பரிசுத்தொகை கிடைத்திருந்தாலும், தன்னை கோடீஸ்வரர் என்று எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் வடிகால் சுத்தம் செய்யும் வேலை செய்து வருகின்றார்.
இந்த சம்பவம் தற்போது பலருக்கும் பெரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் பணம் வந்தாலும் பழைய வாழ்க்கையை மறக்காமல் இருக்கும் இளைஞரை பாராட்டியும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |