உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த பிரபல நடிகை... வாழ்க்கையில் நடந்தது என்ன?
பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்கார் கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள் என்ற பதிவினை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
நடிகர் பிரியங்கா நல்கார்
பிரபல சீரியல் நடிகையான பிரியங்கா நல்கார், ரோஜா, சீதா ராமன் போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல தாக்கத்தினை சந்தித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தான் ஒருவரை நம்பி ஏமாற்றப்பட்டதாகவும், அந்த சம்பவம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதாகவும், கடுமையான மனவேதனை மற்றும் மன அழுத்தத்திற்குள் இருந்துள்ளதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி உயிரை மாய்த்துக் கொள்ளவும் யோசித்ததாகவும், ஆண்கள் மீதான நம்பிக்கையே இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தான் குடும்பத்தில் மூத்த மகளாக இருப்பதாக பொறுப்புகள் அதிக இருப்பதாகவும், அதனால் தான் தான்னால் மீண்டு வரமுடிந்ததாகவும் கூறியுள்ளார்.

காதல் திருமணம்
பிரியங்கா ஏற்கனவே காதல் திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது யாரையும் கண்மூடித்தனமாக நம்பி காதலிக்கக்கூடாது, முழுவதும் தனக்கு துணையாக இருப்பவர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
ஒருமுறை ஏமாற்றப்பட்ட தன்னால் மீண்டும் அதே வேதனையை அனுபவிக்க விருப்பமில்லை என்றும், தனது வாழ்க்கையில் இனி வேறுயாரும் வரப்போவதில்லை... திருமணமும் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |