அடேங்கப்பா.... ப்ரியங்கா சோப்ரா அணிந்த வைர நெக்லஸின் விலை இத்தனை கோடியா?
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸின் விலை தற்போது இணையதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ப்ரியங்கா சோப்ரா
நடிகர் விஜய்யின் 'தமிழன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனையடுத்து, பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். ப்ரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர்.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் ப்ரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனாஸ் கெவின் கலந்து கொண்டனர். அப்போது, தன் மகள் மால்டி மேரியின் முகத்தை முதல் முறையாக உலகத்திற்கு காட்டினார்.
வைர நெக்லஸின் விலை
நேற்று பிரியங்கா சோப்ரா மற்றும் கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள மெட் காலா 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இருவருக்கும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரியங்கா மற்றும் அவரது கணவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் இருவரும் கருப்பு நிற உடையில் தோன்றினர். 7 ஆண்டுகளுக்கு முன் இதே நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் முதன் முதலாக இந்த நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டதாக நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தற்போது இந்நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ் இணையதளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. மெட் காலா 2023 நிகழ்ச்சியில் சுமார் 204 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்கேரி வைர நெக்லஸை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்தார்.
இந்த வைர நெக்லஸ் ஜெனிவாவில் உள்ள Sotheby's Luxury Week இல் ஏலம் விடப்படும் என்று சொல்லப்படுகிறது. விற்பனைக்கு முந்தைய விலை ரூ. 204 கோடிக்கு மேல் என்று சர்வதேச ஜெமோலாஜிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
First Monday in May@MaisonValentino @Bulgariofficial pic.twitter.com/NDvPcr9L7e
— PRIYANKA (@priyankachopra) May 2, 2023
Priyanka Chopra, you absolute beauty ??#MetGala2023 pic.twitter.com/x4elJrhnJG
— Stace (@stacyanomaly) May 2, 2023
The 11.16 carat Bulgari Laguna Blu diamond necklace that Priyanka Chopra is wearing at the #MetGala will be auctioned off for $25 million. It is considered as Bulgari’s most exceptional and valuable gem. pic.twitter.com/F5JX6CaQkD
— Priyanka Daily (@PriyankaDaily) May 2, 2023