12 கிலோ உடல் எடையை குறைத்து முத்தழகாக மாறிய பிரியாமணி! அவரே வெளியிட்ட ரகசியம்
தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் இவரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் பலரது பாராட்டை பெற்றது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பிரியாமணி பெற்றார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டிலாகிவிட்டார் அம்மணி.
தற்போது ஒரு சில தொலைக்காட்சிகளிலும், நடனக் நிகழ்ச்சிகளிலும், நடுவராக உள்ளார். அதனால் உடல் எடை அதிகரித்து நடிக்காமல் இருந்துவந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர், உடல் எடையை குறைத்து மீண்டும் பருத்தி வீரன் முத்தழகு போல் ஜொலிக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலான நிலையில் பலரும் மீண்டும் சினிமாவுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கடந்த நான்கு ஆண்டுகளாக, சைவத்திற்கு மாறியதால் முன்பை விட தற்போது அழகாக தெரிகிறேன் என அழகின் ரகசியத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார். அழகின் ரகசியத்தை கூறியதற்கு சில ரசிகர்கள் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.