2 குழந்தைகளின் அப்பாவை காதலித்து திருமணம் செய்த பிரியாமணி ! முதல் மனைவியால் திருமண வாழ்க்கையில் வெடித்த சர்ச்சை! ஷாக்கில் ரசிகர்கள்
கெரியரில் வெற்றிகரமாக வலம் வரும் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் திடீர் சிக்கல் வெடித்துள்ளது.
ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரைத் தான் 2017ம் ஆண்டு பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2013ம் ஆண்டே ஆயிஷாவையே முஸ்தபா விவாகரத்து செய்துவிட்டதாக கூறிவந்த நிலையில், தன்னை என் கணவர் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்றும், பிரியாமணியை திருமணம் செய்து கொண்ட போது நீதிமன்றத்தில் பேச்சிலர் என கூறியதாகவும் ஆயிஷா பகீர் குற்றச்சாட்டியுள்ளார்.
ஆனால் முஸ்தபா ராஜ், ஆயிஷா தன்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும், என்னிடமிருந்து பணம் பற்றிக்கவே இப்படி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டே ஆயிஷாவை பிரிந்துவிட்டதாவும், 2013ம் ஆண்டு விவகாரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார். 2 குழந்தைகள் முகத்திற்காக இதுவரை பிரச்சனைகளை முடிக்க பார்த்ததாகவும், இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரியாமணியை முஸ்தபா ராஜ் திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் மனைவி ஆயிஷா இப்படியொரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.