புதிதாக கட்டிய வீட்டை இடிப்பதற்கு இது தான் காரணமா? பாசத்தை பார்த்து பிரமித்து போன நெட்டிசன்ஸ்!
அம்மாவின் ஆசைக்கான சொந்தமாக கட்டிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸின் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகின்றது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமாகியவர் தான் பிரியா பிரின்ஸ்.
இதனை தொடர்ந்து இவர் நடிக்க ஆரம்பித்து பெரியதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சீரியல்களில் நடித்து வந்தார்.
“என் பெயர் மீனாட்சி” என்ற சீரியல் இவரின் நடிப்பு பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன், EMI, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக வில்லி கதாபாத்திரம் இவருக்கு சரியாக ஒத்து போனது. இதனால் கண்ணன கண்ணே, இலக்கியா, மற்றும் ராமன் தேடிய சீதை ஆகிய தொடர்களில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், சீரியலை விட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்திரைக்கு சென்றுள்ளார்.
அம்மாவின் ஆசை தான் இது?
நடிகை ப்ரியா பிரின்ஸ் சமீபத்தில் ஒரு புதிய வீட்டை பல இலட்சம் ரூபாய் செலவு செய்து கட்டியுள்ளார்.
இது தொடர்பான வீடியோக்களை நடிகை ப்ரியா பிரின்ஸ் அவரின் யூடியூப்பில் பக்கத்தில் தெரிவித்தார். அதில் சிறிய பகுதியை இடித்து விட்டு மீண்டும் கட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியது.
மேலும் தன்னுடைய அம்மாவிற்கு ஓப்பன் கிச்சன் தான் ஆசை என கூறியுள்ளார். இவரின் ஆசைக்காக மீண்டும் அது போல் கட்டியுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதனை பார்த்த இணையவாசிகள், “ அம்மாவிற்காக இப்படியொரு மாற்றமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.