கடலுக்குள் இப்படியொரு திரில்லான உலகமா? நடுநடுங்கிய இளம்பெண்ணின் திக் திக் நிமிடம்! அசத்தலான காட்சி
நடுக்கடலுக்குள் இருக்கும் உலகத்தினை நீங்கள் அவதானித்தால் எப்படியிருக்கும்? ஆம் நீங்கள் நேரடியாக கடலுக்குள் செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே கடலுக்குள் இருக்கும் மற்றொரு உலகத்தினை காண வைக்கும் காட்சியே இதுவாகும்.
பொதுவாக மனிதர்கள் மிகவும் தூரமான இடத்திற்கு சுற்றுலா சென்று, அங்குள்ள மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படமாகவோ, காணொளி மூலமாகவே வெளியிடுவதை நாம் அவதானித்திருப்போம்.
அவ்வாறு செல்பவர்கள் நிச்சயம் செல்லக்கூடிய ஒரு பயணம் தான் இந்த கடலுக்குள் இருக்கும் மற்றொரு உலகத்தை நம்மைக் காண செய்யும் ஸ்கூபா டைவிங்.
ஸ்கூபா டைவிங் என்பது மூச்சு விடுதலுக்குத் தனிவகைச் சாதனத்தைப் பொருத்திக்கொண்டு நீரினுள் நீந்துதல்; உயிர்ப்புக் கருவியின் துணையுடனான நீரடி நீச்சல் செய்வதே ஆகும்.
வெறும் 3 மணிநேரம் மட்டுமே டிரைனிங் எடுத்துக்கொண்டு நடுக்கடலுக்குள் செல்லமுடியுமா? என்று கேள்விகளை நம்மிலே எழுப்ப வைப்பதே இக்காட்சியாகும்.
பிரியா என்பவர் scuba diving மூலம் பயிற்சி எடுத்துக்கொண்டு, கரையிலிலுந்து 5 கிலோ மீற்றர் தூரம் நடுக்கடலில் சென்ற பின்பு அங்கிருந்து கடலுக்குள் சுற்றுலா சென்றுள்ளார். இவர் பயிற்சி எடுத்ததிலிருந்து தான் சுற்றுலா சென்று வந்தது என அனைத்து மகிழ்ச்சியான தருணத்தினை மிக அழகாக காணொளியில் காட்டியுள்ளார்.
உண்மையிலேயே இக்காட்சியினை அவதானித்தால் நிச்சயம் நமக்கும் கடலுக்குள் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை நிச்சயம் எழும்பும் என்பதில் சந்தேகமே இல்லை.