சொந்தமாக ஓட்டலை திறந்த ப்ரியா பவானி சங்கர் - வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
சொந்தமாக ஓட்டலை திறந்த ப்ரியா பவானி சங்கர் இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பாவனி சங்கர்
முதன் முதலாக செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவார்தான் ப்ரியா பவானி சங்கர். இதனையடுத்து சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தொடரில் கிடைத்த புகழையடுத்து இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இதனையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிவில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உட்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
இதன் பின்பு, கடந்த மாதம் நடிகர் சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். தற்போது ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக இவருடைய ‘ருத்ரன்’ படம் வெளியாகியுள்ளது.
சொந்தமாக ஓட்டலை திறந்த ப்ரியா பவானி சங்கர்
சொந்தமாக பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கர் லியாம்ஸ் டைனர் என்ற ஓட்டலை திறந்துள்ளார். இந்த ஓட்டலை அவர் காதலித்து வரும் காதலருக்காக தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய ஓட்டலுக்குச் சென்ற ப்ரிய பவானி சங்கர் அங்கு சமைக்கப்பட்ட பிரியாணியை ருசிப்பார்த்து சாப்பிட்டார்.
இது குறித்து, நடிகை ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எங்கள் சொந்த லியாம்ஸ் டைனரில் ரம்ஜானைக் கழித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பான் ஷேக் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.