62 வயது கோடீஸ்வர தொழிலதிபரை மணந்த இளவரசி டயானாவின் மருமகள்! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா? ஷாக்காகிடாதீங்க!
மறைந்த இளவரசி டயானாவின் மருமகள் தன்னைவிட 32 வயது அதிகமானவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரின் மகள் லேடி கிட்டி ஸ்பென்சர் (Lady Kitty Spencer).
30 வயதான இவருக்கும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 62 வயதான மைக்கேல் லூயிஸ் (Michael Lewis) என்ற கோடீஸ்வரருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
ரோமில் நடந்த இந்த திருமணத்தில் மைக்கேல் லூயிசின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று மகன்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரித்தானியா நடிகர் இட்ரிஸ் எல்பாவின் மனைவி சப்ரினா உள்ளிட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமணப் புகைப்படங்களை லேடி கிட்டி ஸ்பென்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.