மந்திரத்தை கூறியவாறே தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்- வசமாக சிக்கியது எப்படி?
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் என்ற மாவட்டத்தில் கடந்த நாளில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை நடந்திய புரோகிதர் தாலியை கையில் வைத்துக்கொண்டு மந்திரத்தை கூறியுள்ளார்.
அப்போது, நைசாக தாலியில் இருந்த தங்க குண்டு மணிகளை உருவி திருடியுள்ளார். அப்போது, திருமணத்தில் கலந்து கொண்ட யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் திருமண வீடியோவை திருமண வீட்டார் போட்டு பார்க்கும்போது புரோகிதர் தாலியில் உள்ள தங்கத்தை திருடியது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
இதனையடுத்து, போலீசாரிடம் திருமண வீட்டார் கொடுத்த புகார் அளிக்க, புகாரின் அடிப்படையில் புரோகிதரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஒரு புரோகிதரே தாலியில் உள்ள தங்கத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.