ஒரு ஜீன்ஸின் விலை ஒரு கோடியா? அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?
அமெரிக்காவில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கோடிக்கு சென்ற ஜீன்ஸ்
கடந்த 1857ம் ஆண்டு வட கரோலினா கடலில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை ஏலம் விட்ட போது, பழமையான ஜீன்ஸ் ஒன்று அமெரிக்க டொலருக்கு 114,000 வரை சென்றுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 94 லட்சம் என்று கூறப்படும் இந்த ஜீன்ஸ், அனைவரையும் கவர்ந்துள்ளதாம். 1873 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட லெவி ஸ்ட்ராஸ் & கோ என்ற நிறுவனத்தால் இந்த ஜீன்ஸ் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக ஜீன்ஸ் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன் கப்பல் மூழ்கியிருந்தாலும், இந்நிறுவனத்திற்கும் இந்த ஜீன்ஸ்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நவீன ஜீன்ஸின் தந்தை என்று கூறப்படும் லெவி ஸ்ட்ராஸ் & கோ நிறுவனம் அதிகாரபூர்வமாக ஜீன்ஸ் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பே இந்த ஜீன்சை தயாரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது ஒரு யூகம் தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறிவரும் நிலையில், பழமையான இந்த ஜீன்ஸ் பேண்ட் இவ்வாறு ஒரு கோடி வரை ஏலம் சென்றது வாயடைக்க வைத்துள்ளது.