Labubu: உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பொம்மை
உலகில் மிகவும் விலை உயர்ந்த பொம்மை ஒன்று பிரபலமாகி உள்ளது. இதன் விலைக்கான பின்னணி காரணத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
விலை உயர்ந்த பொம்மை
பொம்மைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆசைப்படுவார்கள்.
நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு தனித்துவத்தை கொண்டது.
இப்படி தான் தற்போது லாபுபு(Labubu) என்ற பொம்மை பிரபலமடைந்து வருகிறது. இந்த லாபுபு பொம்மை ரூ.9 லட்சத்திற்கும் (USD 10,500) அதிகமாக விற்பனையாகியுள்ளது.
இது இதுவரை விற்கப்பட்ட இந்த வகை பொம்மைகளில் மிகவும் விலையுயர்ந்த பொம்மையாக மாறியுள்ளது.
இதன் வடிவம் - ஸ்கேட்போர்டில் சவாரி செய்து, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற தொப்பியுடன் வேன்ஸ் தெரு உடையை அணிந்திருக்கும் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது மின் வணிக தளமான eBay விற்கப்பட்டு பிரபலமடைந்த வருகின்றது.
இதை உருவாக்கியவர் ஹாங்காங்கைச் சேர்ந்த கலைஞர் ஆவார். இது "தி மான்ஸ்டர்ஸ்" என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது.
குறிப்பாக, லாபுபு, பாப் மார்ட் (Pop Mart) என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொம்மைகளின் வரிசையில் உள்ளது.
2023இல் ஷூ பிராண்டிற்கும் லாபுபுவிற்கும் இடையிலான ஒத்துழைப்பாக இந்த பொம்மை தயாரிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது முதலில் விற்கபட்ட விலை ரூ.7,400 (USD 85) சில்லறை விலை ஆகும். ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட பொம்மையானது ரூ.9.15 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு அசல் விலையைவிட சுமார் 125 மடங்கு அதிகம். அதிலும் இவை நோர்டிக் விசித்திரக் கதைகளிலிருந்து ஈர்க்கப்பட்ட பொம்மைகளாகும்.
எப்படி பிரபலமானது?
இந்த பொம்மைகளை கே-பாப் கேர்ள் குழுவான பிளாக்பிங்கைச் சேர்ந்த லிசா, பாடகர்கள் ரிஹானா மற்றும் துவா லிபா, ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.
இதனை பின்தொடர்ந்து பல பிரபலங்களும் இந்த பொம்மையை வாங்க பலரும் இந்த பொம்மை மீது ஈர்ப்பு ஏற்பட்டு லாபுபு பொம்மைகள் பெரும் புகழ் பெற காரணமாகி உள்ளன.
இதனால் இந்த பொம்மைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.இதனை கண்டறிந்த விற்பனையாளர் உரிமையாளர் இந்த பொம்மையின் விலையை உயர்த்தி உள்ளனர்.
இதன் மூலம் பொம்மைகள் விற்கப்படும் இடமான பாப் மார்ட்டினின் தலைமை நிர்வாக அதிகாரி வாங் நிங் சீனாவின் 10வது பணக்காரராக மாறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |