ஒரு லீட்டர் பெற்றோலின் விலை ரூ.2 மட்டும் தான்... எந்த நாட்டில் தெரியுமா?
உலகத்தில் எண்ணை வளம் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் ஒரு நாட்டில் மட்டும் பெற்றோலின் விலை ரூபாய் 2 ஆக உள்ளது.
பெற்றோல்
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலை இந்திய மதிப்பில் ரூ.2-க்கு ஒரு நாடு விற்பனை செய்து வருகின்றது.
டாலர் மதிப்பில் இந்த நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் $0.02 ஆகும். எண்ணெய் வளம் அதிகம் இருக்கும் அரபு நாடுகளில் கூட இந்த விலைக்கு பெட்ரோல் விற்கப்படுவதில்லை எனப்படுகின்றது.
அந்த நாடு எதுவென்பது பலரும் அறியாத ஒன்றே. அந்த வகையில் இந்திய மதிப்பில் ரூபாய் இரண்டிற்கு ஒரு லீட்டர் பெற்றோல் விற்கும் நாடு வெனிசுலா எனப்படுகின்றது.
வெனிசுலாவில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய் வளம் மற்றும் குறைவான மக்கள் தொகையின் காரணமாக அங்கு பெட்ரோல் விலை மிக குறைவாக உள்ளது என கூறப்படுகின்றது. அந்த வகையில் வெனிசுலா பற்றி பார்க்கலாம்.

எந்த நாடு?
வெனிசுலாவின் எண்ணெய் வளம் என்பது அந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக மட்டுமல்லாமல், உலக அரசியலைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாகவும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி வெனிசுலாவிடம் சுமார் 3,030 கோடி பேரல்கள் எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 17.3 ட்ரில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 1,400 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இவ்வளவு பெரும் எண்ணெய் வளம் இருந்தும், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி தற்போது மிகவும் குறைவாக உள்ளது. 1990-களில் தினசரி 35 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக இன்று உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.

மதுரோவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவு மற்றும் அமெரிக்கத் தடைகளால் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல்களுக்கும் குறைவாக உள்ளது.
இதனால் உலக எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலாவின் பங்கு தற்போது வெறும் 1% மட்டுமே இருக்கிறது. அதிகாரத்தில் இருந்த மதுரோவின் வீழ்ச்சிக்கு பிறகு, வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவின் சிதைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சீரமைக்க சுமார் 18 மாதங்கள் ஆகும், மேலும் இதற்கு பல பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்களுக்கும் குறைவாக உள்ள உற்பத்தியை, அடுத்த 2 ஆண்டுகளில் ஒன்றரை மில்லியன் பேரல்களாக உயர்த்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
வெனிசுலாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கவும் அமெரிக்கா தற்போது தயாராகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |