மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? இளையதலைமுறையினர் கட்டாயம் தெரிஞ்சிக்கவும்
இன்றைய இளைய தலைமுறையினரையும் விட்டுக்காத நோயாக மாரடைப்பு காணப்படுகின்றது. இவற்றினை வராமல் தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
இன்றைய தலைமுறையினர் புகைபிடித்தல், மது அருந்துதல் இவற்றினை நவீன வாழ்வியல் பண்பாடாக கருதும் நிலையில், பார்ட்டி என்ற பெயரில் துரித உணவுகள், குளிர் பானங்கள் இவற்றினையும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் மாரடைப்பு ஏற்படுகின்றது.
ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் நிச்சயம் மாரடைப்புக்கு வழி ஏற்படுத்தும். கொலாஸ்ட்ரால் ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. இவற்றினை தடுக்க நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, அதற்கேற்ற மாத்திரை இவற்றினை எடுத்துக் கொள்ளவும்.
நமது உடலை வருடத்திற்கு ஒருமுறையாவது பரிசோதித்து கொள்வது அவசியமாகும். அவ்வப்போது இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டால், மாரடைப்பு வரும் முன் நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
நெஞ்சு வலி, இடது கைக்கும் தாடை பகுதிக்கு வலி ஏற்படுதல், அதிகமான வியர்வை, மயக்கம், மூச்சுத்திணறல் போன்றவை மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். ஆனால் முதியோர், சர்க்கரை வியாதி இருப்பவர்கள் மாரடைப்பு வரும் போது எந்த அறிகுறிகளும் தெரிவதில்லையாம். இதனையே ஹார்ட் அட்டாக் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |