குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகப்படுத்தணுமா? இந்த சட்னி போதும்
கீரைகள் என்றால் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருளாகும். ஒவ்வொரு கீரைகளுக்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது. பொதுவாக வல்லாரைக்கீரை பச்சையாக சாப்பிட கூடியதாகும்.
இதில் நினைவாற்றலை அதிகப்படுத்தும் சக்தி உள்ளது. இந்த வல்லாரக் கீரையை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளளாம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கட்டு வல்லாரக் கீரை
- 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- ஒரு டீஸ்பூன் மல்லித் தூள்
- ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு
- எலுமிச்சை அளவுள்ள புளி
- 5 வற மிளகாய்
- 8 முதல் 10 பெரிய வெங்காயம்
- துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு
- அரை ஸ்பூன் கடுகு
செய்முறை
முதலில் வல்லாரை கீரையை தண்டு நீக்கி இலைகளை மட்டும் பறித்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள வல்லாரை இலைகளை போட்டு வதக்க வேண்டும். அவை நன்கு சுருங்கியதும் அவற்றை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், மல்லித் தூள், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இவை வறுபட்டதும் இவற்றுடன் 5 மிளகாய்களை சேர்த்து வறுக்க வேண்டும்.
அவை லேசாக வதங்கியதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைத்துள்ள வல்லாரைக் கீரையையும் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின்னர் கடைசியாக அரை கப் அளவிற்கு நறுக்கிய அல்லது துருவிய தேங்காயை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஆறிய பின்னர ஒரு மிக்சியில் போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மையாக அரைக்க கூடாது.
பின் அதேபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியை போட வேண்டும் இப்போது சுவையான வல்லாரக் கீரை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |