அரைத்த இட்லி மாவு புளிக்காமல் இருக்கணுமா? இந்த ஒரு காம்பு அடியில் போடுங்கள்
இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும்.
இட்லி உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்த ஒரு உணவாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.
இதை செய்ய அரைத்து வைக்கும் மாவை சுமார் 8 மணிநேரம் ஊற வைப்பார்கள். ஆனால் இது அதிகமானால் மேலும் புளிக்காமல் இருக்க இட்லி மாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இட்லி தாவு புளிக்காமல் இருக்க செய்ய வேண்டியது
இட்லி மாவு புளிக்கும்போது, புரோ பயாடிக்குகளை உருவாக்குகிறது. செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு அவசியம்.
இட்லி மாவு அரைக்கும் போது கிரைண்டரில் பழைய மாவு ஏதும் தங்கியிருந்துவிடாமல், நன்றாக கழுவி எடுத்து, புது அரிசியை அரைக்க வேண்டும்.
உளுந்து 1 மணி நேரம் வரை மட்டுமே ஊற வேண்டும். அரிசி 3-லிருந்து 4 மணி நேரம் வரை மட்டுமே அரிசி ஊற வேண்டுமே தவிர, இரவெல்லாம் ஊறவிடக்கூடாது.
இதனால் மாவு புளித்து விடும். மாவு அரைக்கும்போது எப்போதும் ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்த வேண்டும். 20 நிமிடத்துக்குள் உளுந்து பொங்கி விடும் என்பதால், அப்போதே எடுத்துவிட வேண்டும்.
அரிசியை தனியாக அரைக்க வேண்டும். அரிசி 15 நிமிடத்தில் அரைந்துவிடும். இப்போது, உளுந்து, இட்லி இரண்டு மாவையும் ஒன்றாக கொட்டி 5 நிமிடம் ஆட்டி எடுத்து கொள்ளலாம்.
இதன்போது மாவை கலக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் அதற்கு ஒருபோதும் கைகளை பயன்படுத்தாமல் கரண்டியை பயன்படுத்த வேண்டும்.
ஒரு பாத்திரத்தின் அடியில் 2 வெற்றிலையை காம்புடன் வைத்து, அதற்கு மேல் மாவை ஊற்றி வைத்தாலும் மாவு புளிக்காமல் இருக்கும். இட்லி மாவுக்கு மேல் ஒரு வாழையிலையை நறுக்கி வைத்து மூடினாலும் மாவு புளிக்காமல் இருக்கும்.
மாவு அரைத்து பின்னர் உப்பு போட்டு கலந்த பிறகு, அதில் 5 ஓமவல்லி இலைகளை போட்டாலும் மாவு புளிக்காது. ஃப்ரிட்ஜில் அரைத்த மாவு, உப்பு போடாமல் வைப்பதால் புளிக்காமல் இருக்கும். இப்படி மாவை புளிக்க வைக்காமல் இருக்க நிறைய வழிகள் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |