premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும்
பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.
ஆனால் பத்து நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த காலத்தில் பெண்களுக்கு உணவின் மீது நாட்டம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் மாதவிடாய் காலத்தில் தான் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் உட்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும், உடல் அமைப்பு மற்றும் மாதவிடாய் கால வலிகளும் மாறுபடக்கூடும்.
பொதுவாக பெண்களில் மாதவிடாயானது ஒவ்வொரு மாதமும் 3 முதல் 7 நாட்கள் வரையில் நீடிக்கும். ஆனால் மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே உடலில் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும்.
மருத்துவ ரீதியில் இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome)என குறிப்பிடப்படுகின்றது.
இது மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு பெண்ணின் உடலில் நிகழும் மாற்றங்களையே குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் மாதவிடாய் வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் மனநிலை, உணர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நடத்தையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்ப்டும்.
மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்
மனநிலை மாற்றங்கள்
வயிற்று உப்புசம்
ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல்
மார்பு பலூன் போல வீங்கி காணப்படுதல்
பெண்ணுறுப்பில் தாங்க முடியாத எரிச்சல் வலி
அதிக கோபம்
சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
அந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்?
மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூளையில் செரோடோனின் எனப்படும் வேதிப்பொருளின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
செரோடோனின் உங்கள் மனநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் உங்களை மகிழ்ச்சியாக உணர உதவுகிறது.
ஆனால் மதவிடாய் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் இந்த மாற்றம் செரோடோனின் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது, இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுடன் தொடர்புடைய மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
வாழ்க்கை முறை காரணிகளான உணவு முறை மற்றும் தூங்கும் அளவு போன்றனவும் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுடன் தொடர்பை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
சாதாரண நபர்களை விட பருமனான மக்கள் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மன அழுத்தம் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுக்கு நேரடி காரணம் அல்ல. ஆனால் இந்த அறிகுறிகள் மன அழுத்தத்தால் மோசமடைய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
சில உணவுகளை மிகக் குறைவாகவும் மற்றவற்றை அதிகமாகவும் சாப்பிடுவது கூட மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுடன் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது.
உதாரணமாக, அதிக உப்பு உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தும். காஃபினேட்டட் பானங்கள் மற்றும் ஆல்கஹால் உடலின் மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை சீர்குலைப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நேரத்தில் பெண்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம். மன அழுத்தத்தை குறைக்க தியானம் மற்றும் மனதுக்கு பிடித்த இனிமையான விடயங்களை செய்வது ஆறுதல் அழிக்கும்.
குறிப்பாக இந்த நேரங்களின் தான் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த உணவு முறையை பின்பற்றுதல், சிறந்த தூக்கம் போதிய ஓய்வு ஆகியன மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளின் பாதிப்புளை குறைக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |