ஆர்டர் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாண்ட்விச்சுடன் பார்சலில் வந்த பொருள்! பதறிய சம்பவம்;
கர்ப்பிணி பெண் ஒருவர் சாண்ட்விச்சை ஆர்டர் செய்து அதை திறந்து பார்க்கையில் அதற்குள் இருந்த பொருள் அவரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் சஃபோல்க் பகுதியை சேர்ந்தவர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நெரிஸ் மொய்ஸ். இவர் கர்ப்பிணி ஆக இருந்துள்ளார்.
இதனிடையில், அவர் பிரபல உணவகம் ஒன்றில், சாண்ட்விச் ஒன்றை அவரது கணவர் ஆர்டர் செய்துள்ளார். இதன் பின்னர், வீட்டுக்கு வந்து பார்சலை திறந்து பார்த்தபோது, கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
இதற்கு காரணம் சாண்ட்விச் டியில், காய்கறி வெட்ட பயன்படும் பெரிய கத்தி ஒன்று இருந்ததுள்ளது. இதனைக்கண்டு, அவர்கள் இருவரும் அதிர்ந்து போகவே, இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அப்பெண் வெளியிட்டுள்ளார்.
பார்சலில் இருந்த பொருள்
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாண்ட்விச் “பார்சலை திறந்து பார்த்ததும் ஒரு நிமிடம் நாங்கள் உறைந்து போய் விட்டோம்.
மேலும், எனது பார்ட்னரும் உணவகத்திற்கு அழைத்து, உங்களின் மஞ்சள் நிற கத்தி ஒன்று தொலைந்து போனதா என கேட்டார். ஒரு வேளை இந்த கத்தி இருக்கும் பார்சல், சிறு குழந்தை அல்லது டீனேஜர்கள் கைக்கு போயிருந்தால், என்ன ஆகி இருக்கும்.
என்னிடம் கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி தான்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதற்கு, சாண்ட்விச் உள்ளே வாடிக்கையாளர்களுக்கு கத்தி வைக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
இப்படி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.