தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்... குழந்தையை கொன்றுவிட்டு உயிரை மாய்த்த சோகம்
இந்தியாவில் பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனக்குத்தானே பிரசவம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு அருகே வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வசந்தி(40). இந்த தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
கணவர் சென்ட்ரிங் வேலை செய்து வரும் நிலையில், போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார்.
குறித்த குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, வாலியில் வைத்து துணியால் மூடி வைத்துள்ளார். பின்பு பிரசவத்துக்குப் பின்பு வசந்திக்கு ரத்தப்போக்கு ஏற்படவே அருகில் இருந்தவர்களிடம் தனக்கு மயக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ள நிலையில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் வறுமையின் காரணமாக மேலும் ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்று எண்ணி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்று, தானும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |