திருமணம் முடிந்த கையோடு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை! திகைத்து போன ரசிகர்கள்..
திருமணமாகி சில மாதங்களிலே தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் வெளியிட்டு நடிகை நக்ஷத்திரா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகம்
நடிகை நக்ஷத்திரா பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “யாரடி நீ மோகினி” என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார்.
மேலும் இவரின் யதார்த்தமான நடிப்பால் மக்களை அதிகம் கவர்ந்து வைத்திருக்கிறார். இவர் நிறத்தில் சற்று குறைவாக இருந்தாலும், இவரின் நடிப்பு மற்றைய நடிகைகளை சற்று ஓட விட்டது என்றே கூற வேண்டும்.
இதனை தொடர்ந்து “வள்ளி திருமணம்” என்ற தொடரில் கமிட்டாகி தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் “யாரடி நீ மோகினி” என்ற சீரியலில் நடித்து விட்டு இருக்கும் போது சேனலின் சில சீரியல்களில் தயாரிப்பு நிர்வாக பணிகளில் ஈடுப்பட்டு வரும் விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் முடிந்து கொஞ்ச நாளில் பேபியா?
இதனை தொடர்ந்து இவர் இது மட்டுமன்றி விஷ்வா சென்னையில் ஒரு டாட்டு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் குடும்ப நண்பர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் அவருடைய ரசிகர்களுக்கு புகைப்படத்தில் தனது வயிற்றை பிடித்தவாறு அறிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “நேற்று கல்யாணம் முடித்தது போல் இருந்தது.. அதுக்குள்ள பேபியா?” என அதிர்ச்சியான கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.