கர்ப்பகாலத்தில் 'மேக்கப்' போடுவதால் கருவுக்கு பாதிப்பு ஏற்படுமா?
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே... இதே போன்று உடையிலும் கவனமெடுக்கும் நாம் மேக்கப் போடுவதில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
கர்ப்பமாக இருக்கும் போது மேக்கப் போடுவது வயிற்றில் வளரும் கருவுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது.
கர்ப்ப காலத்தில் மேக்கப்
மேக்கப் பொருட்களில் இருக்கும் பாராபென்ஸ், சோடியம் லாரில் சல்பேட், பித்தலேட்ஸ் போன்ற ராசாயனக் கலவைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. இதனை கர்ப்ப காலம் முடியும் வரை தவிர்ப்பது நல்லது. இதே போன்று செயற்கை நிறங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் இவற்றினை தவிர்கக்வும்.
அழகு சாதனப் பொருட்களில் செயற்கை ரெட்டினாய்டுகள் எனப்படும் வைட்டமின் ஏ கலவை பயன்படுத்தப்படுகின்றது. இதனால் கருவுற்ற பெண்களின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்.
இதுமட்டுமில்லாமல் மேக்கப் பொருட்களில் கலக்கப்படும் காரீயம் மற்றும் பாதரசம் இவைகளும் கருவில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கவும்.
இதே போன்று உதட்டு சாயம் பூசுவது, நாம் அருந்தும் உணவு தண்ணீருடன் வயிற்றுக்குள் செல்வதால் தீங்கு ஏற்படுத்தும். தேன், ரோஸ் எண்ணெய் பாதாம் எண்ணெய் என இயற்கை பொருட்களால் ஆன லிப்ஸ்டிக்கை பயன்படுத்தவும்.
முக கிரீம்: முகத்துக்கு பூசும் கிரீம்களில் செயற்கையான பொருட்கள் அல்லது ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, 'ஹைபோஅலர்ஜெனிக்', 'வாசனை இல்லாத', 'இயற்கையான' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீம்களை தேர்ந்தெடுக்கலாம்.
நெயில் பாலிஷ் இவற்றிலும் நச்சுக்கள் அதிகமாக இருப்பதால் உடம்பிற்குள் சென்று தீங்கு விளைவிக்கின்றது.
மேக்கப் இல்லாமல் அழகு
கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும், கண்மை இயற்கையான முறையில் கற்பூரம், ஆமணக்கு இவற்றில் தயாரித்தால் பயன்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்பட்டாலும், கர்ப்பிணி பெண்களுக்கு உரித்தான பொலிவு, அவர்களுக்கு தனி அழகை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவும், பழங்களும், பச்சை காய்கறிகளும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், அழகும் இயற்கையாகவே மேம்படும்.
கர்ப்ப காலத்தில் 100 சதவீதம் இயற்கையான மேக்கப் பொருட்களையே பயன்படுத்துவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |