மகப்பேற்றின் பின்னரான உணவு முறைகள்
கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு காலகட்டமாகும். அந்தத் தருணத்தில் அவர்கள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கல்சியம், இரும்பு, போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகளவில் தேவை. இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தில் உணவு எளிதில் ஜீரணமாக, சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அதேபோல் குந்திரிக தைலம், உளுந்து தைலம் என்பவற்றை வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தடவலாம்.
இது சுகமகப்பேற்றுக்கு உதவும். வாந்தி, குமட்டல், என்பவை நீங்க கறிவேப்பிலை, மாதுளை பழச்சாறு என்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தை பிறந்ததன் பின்னர் பெண்கள் தாய்ப்பாலூட்டுவதால் வெள்ளைப் பூண்டு, உளுந்து, வெந்தயம், பாதாம் போன்றவற்றை உண்ணலாம். குழந்தை பிறந்ததன் பின்னர் பித்தப்பையில் கல், கொழுப்புச் சத்தின் அளவு அதிகரித்தல் போன்றன ஏற்படும்.
அதனால் சரியான நேரத்தில் உணவு அருந்துதல், அளவாக உண்ணுதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தல், உணவில் மஞ்சள், பீட்ரூட்,வெள்ளைப் பூண்டு என்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல். கெரட், பப்பாளி போன்றவற்றையும் உண்பது நல்லது.