சித்தி 2 சீரியல் நடிகை திடீர் திருமணமா? வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்!
சித்தி 2 சீரியல் வெண்பா நடிகையான ப்ரீத்தி ஷர்மாவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் சித்தி 2. இந்த சீரியலில் வெண்பா வேடத்தில் ப்ரீத்தி ஷர்மா என்பவர் நடிக்கிறார்.
இவர், அடிக்கடி இணையத்தளங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது ப்ரீத்தி ஷர்மா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இதனால், ரகசிய திருமணம் செய்துவிட்டாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆனால் உண்மையில் மாடலிங் ஷூட்டிங் புகைப்படம் என தெரியவந்துள்ளது.