அம்பானி வீட்டு விஷேசத்தில் புகைப்படம் எடுப்பவருக்கு இவ்வளவு சம்பளமா? ரொக்கமாக வசூல் செய்த photographer
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களுக்கு புகைப்படங்களை எடுத்த போட்டோகிராபரின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி- ராதிகா
ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.
இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற உள்ளது.
இவர்களின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து 2 ஆவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி 3 நாட்கள் இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வுகளில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது.
போட்டோகிராபரின் சம்பளம்
அந்த வகையில், ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களின் புகைப்படங்களை ஜோசப் ராதிக் என்ற புகைப்பட நிபுணர் எடுத்தார்.
இவர் ஒரு பிரபல புகைப்பட கலைஞர். விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல், கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி போன்ற பெரிய பிரபலங்களின் திருமணங்களில் இவர் தான் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ப்ரீ வெட்டிங்கில் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஜோசப் ராதிக் ஒரு நாளைக்கு ரூ.1,25,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் பயண செலவு, தங்குமிடம் ஆகியவை அனைத்து அம்பானி பார்த்து கொண்டார்.
எனவே ஆனந்த் அம்பானி - ராதிகாவின் 4 நாள் பயணத்திற்கு முந்தைய திருமண நிகழ்ச்சிக்கு, மொத்த கட்டணம் ரூ. 6,00,000 வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |