இறால் குழம்பு எளிமையா செய்யும் ரகசியம் தெரியுமா? இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அனைவருகும் பிடித்த அசைவ உணவுகளின் பட்டியலில் இறால் கண்டிப்பாக இருக்கும்.
இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு அசைவ உணவு.
இறாலை ஒவ்வொருவரும் அவர்களது பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளுடன் சமைப்பது உண்டு.
ரொம்பவே இலகுவான முறையில் அல்டிமேட் சுவையில் இறால் குழம்பு தயாரிக்கும் முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்முறை
முதலில் ஒரு கடாயில் தேயைான அளவு இறாலை தண்ணீர் சேர்க்காமல் சிறிதளவு மஞ்சள் தூள் மாத்திரம் சேர்த்து இறாலில் இயற்கையாக உள்ள தண்ணீர் முழுமையாக வற்றும் அளவுக்கு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் 2 நறுக்கிய வெங்காயம் மற்றும் 3 பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்க வேண்டும்.
பின்னர் இத்துடன் பூண்டு, இஞ்சி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து வாசம் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்து கூடவே தேவையான அளவு கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக கிளரிவிட வேண்டும்.
அதன்பின் 1 தே.கரண்டி மிளகாய் தூள் மற்றும் 1 தே. கரண்டி மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளரிவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடியால் மூடி எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரை வேகவைத்தது இறக்கினால் மணமணக்கும் சுவையான இறால் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |