சிறார்களை கைக்குள் போட்டுக் கொள்ள சூப்பரான ரெசிபி இறால் Balls
பொதுவாக வீட்டிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று கடல் வாழ் உயிரினங்களை வைத்து செய்யப்படும் உணவுகள்.
இந்த உணவுகளை சிறுவர்களுக்கு கொடுப்பதன் மூலம் கண் பார்வை மற்றும் தேக ஆரோக்கியம் போன்ற பல வகையான நன்மைகளை நமக்கு தருகிறது.
இதனை தினமும் எடுத்துக் கொள்வதால் பெண்களை அதிகம் தாக்கும் தைரோயிட்டு போன்ற குணமாக்க முடியாத நோய்களை குணமாக்கிறது.
அந்த வகையில் குட்டி குட்டி இறால்களை வைத்து மாலை நேர தேநீருக்கு மொறுமொறுப்பான இறால் பால்ஸ் எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் - 500 கிராம்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் பெரியது - 1
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் தேவையான இறால்களை எடுத்து சுத்தம் செய்து விட்டு, அதனை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் கழுவ வேண்டும், இவ்வாறு கழுவுவதால் இறாலில் இருக்கும் கடல் வாசனை சென்று விடும். அப்படியே இறாலை சிறுசிறு துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு என்பவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இறால்களை சுத்தமான பாத்திரமொன்றுக்கு மாற்றி அதனுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது என்பவற்றை சேர்த்து நன்றாக கைகளால் அல்லது கரண்டிகளால் கிளறி கொள்ளவும்.
கிளறிய பின்னர் முட்டையை அதில் உடைத்து ஊற்றி மீண்டும் ஒரு முறை கிளறிக் கொள்ளவும். கிளறிய இறால்களை சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 -35 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கொள்ளவும்.
35 நிமிடங்கள் முடிந்தவுடன் இறால்களை எடுத்து, ஒரு வாணலியில் நன்றாக எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்த பின்னர் இறால்களை போட்டு பொறித்தெடுக்க வேண்டும்.
நன்றாக பொறிந்து வந்த பின்னர் கொத்தமல்லி தழைகள் மேலோட்டமாக தூவி பரிமாறினால் ஆவலுடன் எதிர்பார்த்த மொறுமொறு இறால் Balls தயார்!