மனைவியின் பிறந்த நாளில் ஒரே வீடியோவில் மொத்த காதலையும் கொட்டிய பிரசன்னா - வைரலாகும் வீடியோ
நடிகை சினேகாவின் பிறந்த நாளிற்கு அவருக்காக பிரசன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நடிகை சினேகா
முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிறகு தமிழில் மாஸ் காட்டிய நடிகைதான் சினேகா. தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் அறிமுகமானார் ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் போகாததால் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார்.
பின்னர் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். அதன்பின்னர் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வெற்றியைப் பெற ஆரம்பித்தது.
இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருந்தார். அதனால் அவரை இன்னும் புன்னகை அரசி என்ற பெயரையும் வாங்கி விட்டார்.
பின்னர் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் பிரசன்னாவுடன் ஜோடியாக நடித்த வேளையில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் இருவரும் அவர்களின் வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்துக் கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு விஹான் மகனும் ஆதியன்தா மகளும் இருக்கிறார்கள்.
பிறந்தநாளில் வாழ்த்து
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சினேகாவிற்காக அவரது கணவரான பிரசன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அதில் சினோகாவுடன் இருக்கும் பல புகைப்படங்களை எடுத்து வீடியோவாக செய்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா. நீ என் பொக்கிஷம். உங்களுடன் அழகான படங்களையும் இன்னும் பல அழகான நினைவுகளையும் சேகரித்துக் கொண்டே இருக்கிறேன்” என காதலோடு பதிவிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |