இரண்டாவது கர்ப்பத்தை வித்தியாசமாக அறிவித்த நடிகை பிரணித்தா!
தென்னிந்திய நடிகை பிரணிதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் இணையத்தில் புகைப்படங்கள் மூலம் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரணிதா
பிரணிதா உதயன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தமிழ் படத்தில் மட்டும் தன்னுடைய திறமையை காட்டி கொள்ளாமல் கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
நடிகை பிரணிதாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கும் தாயாக போகிறார். இவர் முதல் குழந்தை பிறந்ததற்கு பின்னர் தனது பிட்னஸை பேணி பராமரித்து வந்ததுடன் நடிப்பிலும், மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் தனது நீண்ட நாள் காதலர் நிதின் ராஜுவை கடந்த 2021 மே மாதம் திருமணம் செய்தார் நடிகை பிரணிதா. இவர்களது திருமணம் கொரோனா காலத்தில் நடந்தது என்பதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இதனை அடுத்து 2022 ஏப்ரல் மாதம் பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டா பதிவில், "ரவுண்டு 2, இந்த பேண்ட் சைஸ் இதற்கு மேல் எனக்கு பத்தாது" என குறிப்பிட்டு தனது கர்ப்பகால வயிற்றுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |