இந்தப் படத்திற்கு ஆஸ்கார் மட்டும் தான் குறைச்சல்: பதான் படத்தை விமர்சித்தவர்களை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்
பதான் திரைப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்றில் பேசிய விடயம் தற்போதும் பெரும் வைரலாகி வருகிறது.
பதான் திரைப்படம்
ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தான் பதான்.
கடந்த ஜனவரி 25ஆம் திகதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பதான் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருவதால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பொலிவுட் திரையுலகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். பதான் திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீபிகாவின் ஆடைக்குறித்து பல சர்ச்சைகள் கிளம்பியிருந்தது.
இதனால் இத்திரைப்படம் பெருமளவில் ஓடாது என நினைத்த மக்கள் இப்படம் வசூல் சாதனைப்படைக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள்.
விட்டு விளாசிய பிரகாஷ்ராஜ்
பதான் திரைப்படம் வெளியானதிற்கு மக்கள் இடையேயும் அரசியல்வாதியினரிடையேயும் பெரும் எதிர்ப்பு இருந்தது. இந்த திரைப்படம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, “பதான் படத்தை தடை செய்ய விரும்பினார்கள். ஆனால் அப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தை எதிர்த்தவர்களால் மோடியின் பயோபிக் படமான பிஎம் நரேந்திர மோடி என்கிற திரைப்படத்திற்கு ரூ.30 கோடி கூட கலெக்ஷனை பெற முடியவில்லை.
மேலும் "அதேபோல் காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படம் ஒன்றை எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் காறித் துப்பினர். அப்படி இருந்தும் இவர்களுக்கு புத்தி வரவில்லை.
இதில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கொடுக்கவில்லை என அதன் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கவலைபட்டாராம். இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என பிரகாஷ் ராஜ் கிண்டலாக பேசியிருக்கிறார்.