நடிகர் பிரகாஷ் ராஜ் இத்தனை கோடிகளுக்கு அதிபதியா! இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
கோலிவுட்டில் சிறந்த வில்லனாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ் யிற்கு தற்போது 59 வயதாகும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரகாஷ் ராஜ்
இவர் நடிப்பதில் மட்டும் திறமை வாய்ந்தவர் இல்லை. இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தன்னுள் பல்வேறு முகங்களை புதைத்து வைத்துள்ளார்.
இவர் முதலில் ஒரு நாடகம் நடித்தார் அதில் ரூபாய் 300 ஐ சம்பளமாக பெற்று வந்தார். இதன் பின்னர் தமிழ் சினிமாவில் 1994-ம் ஆண்டு வெளிவந்த டூயட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரகாஷ் ராஜ்.
இவரின் நடிப்பிற்காக சுமார் நான்கு முறை இவர் தேசிய விருது பெற்றுள்ளார். இவர் கூடுதலாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மக்களின் மனம் கவர்ந்த வில்லனாக உருவெடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
இவருக்கு 1994 ம் ஆண்டு திருமணமாகி 2009 ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆண்டே போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜுக்கு வேதந்த் என்கிற மகனும் உள்ளார்.
தற்போது 59 வயதாகும் பிரகாஸ் ராஜ் யின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. இவர் ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |