இரண்டாவது காதலியை கரம்பிடித்தார் நடிகர் சித்தார்த்: இவரின் முதல் மனைவியை பார்த்ததுண்டா?
நடிகை அதிதி ராவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் சித்தார்த் அவரை காதல் திருமணம் செய்து கொண்டார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சித்தார்த்
இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார்.
இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஹிட்டானது. இவர் திரையுலகிற்கு கதாநாயகனாக நடித்த சில வருடங்களுக்கு பின் மேக்னா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் 2003 ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் இந்த திருமண வாழ்க்கை சித்தார்திற்கு நீடிக்கவில்லை இவர்கள் இருவருக்கும் 2007 ம் ஆண்டு விவாகரத்து கிடைத்து பிரிந்து விட்டனர்.
இதன் பின் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்தார்.
இந்த நிலையில் சித்தார்த் சமந்தா மற்றும் ஸ்ருதி ஹாசனை காதலித்தார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் இது எந்த அளவிற்கு உண்மை என்று குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் அதிதி ராவை காதலித்த சிர்த்தார்த் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 44 வயதாகும் சித்தார்த்தின் முதல் மனைவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.