நான் அவன சும்மா விட மாட்டேன்... கம்ருதினை எச்சரித்த பிரஜன்
கம்ருதின் மற்றும் பார்வதி TTF டாஸ்கில் சான்ராவை கெட்ட வார்த்தையால் பேசி அவரை காரின் உள்ளே இருந்து வெளியே தள்ளி விட்டதை பார்த்த பிரஜன் தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உ்ளளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் பங்கேற்ற கார் டாஸ்கில், சான்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதின் சேர்ந்து காரிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் பின்னர் சான்ராவன் உடல் நிலை சரி இல்லாததால் அவரை மருத்துவரிடம் அழைத்தும் சென்றுள்ளனர். இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரஜன் கூறியது என்ன?
இந்த நிலையில், சான்ட்ராவின் கணவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான பிரஜின் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துவிட்டதாகவும், தற்போது புதிய திரைப்பட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார்.

சான்ட்ராவுக்கு நடந்த சம்பவம் குறித்து மன வேதனை தெரிவித்த பிரஜின், “என்னுடைய மனைவியை காரிலிருந்து தள்ளியதைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது.
இந்த தகவல் வெளியில் இருந்து தான் எனக்கு கிடைத்தது. பிக்பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் உடனே பேச முடியவில்லை. நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, சான்ட்ரா தற்போது நலமாக இருப்பதாக கூறினர்” என்றார்.
மேலும், “அங்கு நடந்த சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. என்ன பேச வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது போட்டியாளர்களுக்கு சுய அறிவாக இருக்க வேண்டும்.

கம்ருதின் மற்றும் பார்வதி தவறு செய்திருந்தால், அவர்களுக்கு உரிய தண்டனை இந்த வாரமே வழங்கப்பட வேண்டும். மீண்டும் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறேன்.
அப்போது கம்ருதின் உள்ளே இருந்தால் அது அவருக்கு கெட்ட நேரம், இல்லையெனில் நல்ல நேரம். இது ஒரு எச்சரிக்கையாக கூட இருக்கலாம்” என கூறியுள்ளார்.
Shocking violence in #BiggBossTamil9: Contestant #SandraAmy brutally kicked from task vehicle by Kamrudin & Parvathy, causing tears, collapse, and seizures.
— Lt Col N Thiagarajan Veteran (@NTR_NationFirst) January 2, 2026
Unchecked rough and unethical behavior from Day 1 endangers lives and violates Article 21. Shame on @vijaytelevision for… pic.twitter.com/YZAXyv1rfm
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |