பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கான டைட்டில் இன்று வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன்

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் பிரதீப்.
பிரதீப் ரங்கநாதன் 2019 ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார்.

முதல் படமே மாபெரும் ஹிட் கொடுத்தது. முதல் படத்திலேயே தனது திறமையை பரைசாற்றி இயக்குநராகவே தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து 2022 ஆம் வெளியான ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதில் தானே ஹீரோவாகவும் அறிமுகமானார்.

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரதீப்பின் நடிப்புக்கு ரசிகர் பட்டாளமே குவிந்தது.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் பாலிசி’ என்ற படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். இப்படம் படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வித்தியாசமான முறையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பிரதீப் கமிட்டாகியுள்ளர்.

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு டிராகன் (Dragon) என டைட்டில் வைத்துள்ளனர். குறித்த லைட்டில் இன்று அனல் பறக்க வெளியிடப்பட்டு இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
#DRAGON ?
— Pradeep Ranganathan (@pradeeponelife) May 5, 2024
டிராகன்
డ్రాగన్@Ags_production @Dir_Ashwath#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi pic.twitter.com/7gQJwihMnl
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        