Red Card கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. பிக்பாஸில் பரபரப்பு
Red Card கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
5 வாரங்களை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா, பவா செல்லத்துறை, விஜய் வர்மா, யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி வெளியேறி இருக்கிறார்கள்.
கடந்த வாரம் 5 வைல்டு கார்ட் போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் மீண்டும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 18 ஆனது.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என கருத்து தெரிவித்து வந்தனர், இந்நிலையில் கடந்த வாரம் உள்ளே சென்ற அன்னபாரதி வெளியேற்றப்பட்டிருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், மற்றொரு போட்டியாளரும் வெளியேறப்பட்டிருக்கிறார்.
சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், தொடர்ந்து எல்லை மீறிய பேச்சுகளால் பிரதீப்-க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
மற்ற போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொள்வது, தகாத வார்த்தைகள், சண்டை என தொடச்சியாக மற்ற போட்டியாளர்கள் புகார் அளித்ததாலும் பிக்பாஸ் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
எனினும் ஒரு சாரார் பிரதீப்-க்கு ஆதரவை வழங்கி வரும் சூழலில், அவரும் இல்லையா? பிக்பாஸ் என்ன ஆவது? என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |