தனது வீட்டை விற்ற நடிகர் பிரபுதேவா! எத்தனை கோடிக்கு தெரியுமா?
நடிகர் பிரபு தேவா மும்பை தனது இரண்டு வீடுகளை பல கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபுதேவா
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், மாஸ்டர் என பன்முக திறமையுடன் வலம்வருகின்றார் நடிகர் பிரபுதேவா. இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகின்றார்.
நடனத்தின் மூலம் பட்டையக் கிளப்பிய பிரபுதேவாக நடிப்பில் களமிறங்கி ரசிகர்களின் ஆதாரவை பெற்றார். பின்பு படம் இயக்கும் வேலையில் ஈடுபட்ட பிரபுதேவா பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.

இவர் ரமலத் என்ற பெண்ணை திருமணம் செய்து பல ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், அவரை பிரிந்து நயன்தாராவைக் காதலிக்கத் தொடங்கினார்.
பின்பு நயன்தாராவுடன் பிரிவு ஏற்பட்ட நிலையில், வேறொரு பெண்ணைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடிப்பிலிருந்து ஒதுங்கிய பிரபுதேவாக தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கிவருகின்றார்.
அந்த வகையில் பேங் பேங், மூன் வாக் ஆகிய படங்களை நடித்து வரும் நிலையில், இவரைக் குறித்து புதிய தகவல ்ஒன்று வைரலாகி வருகின்றது.
வீட்டை விற்றாரா?
நடிகர் பிரபுதேவா பாலிவுட்டில் அதிகமாக பணியாற்றிய நிலையில், மும்பையில் இருக்கும் மகாலட்சுமி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு வீடுகளை வாங்கியிருந்தார்.
பிரம்மாண்ட இந்த அபார்ட்மெண்டில் 32 மற்றும் 33வது அடுக்குகளில் அந்த வீடுகள் பிரபுதேவாவிற்கு இருந்தது. 2012ல் வாங்கிய அந்த வீடுகளை தற்போது 14.80 கோடி ரூபாய்க்கு பிரபுதேவா விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வீட்டின் பத்திர பதிவு கூட சமீபத்தில் தான் நடந்து முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |