மகனுடன் பிரபுதேவா வெளியிட்ட புகைப்படம்... அப்பாவையே ஓவர்டேக் செய்த அழகு
நடிகர் பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், தனது மகனுடன் நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகர் பிரபுதேவா
தென்னிந்திய சினிமா உலகின் மிகப்பெரிய நடிகராகவும், நடன இயக்குனருமான பிரபுதேவா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வலம் வருகின்றார்.
இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரைத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் பிறந்தனர். இதில் மூத்த மகன் விஷால் தனது 12ம் வயதில் 2008ம் ஆண்டு காலமானார்.
திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பின்பு தனது மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்றார். இவரது முதல் மனைவி பிரச்சினை செய்ததால் நயன்தாரா இவரை விட்டு பிரிந்தார்.
ஆனால் பிரபுதேவாவின் மனைவி இன்னும் நயன்தாரா மீது கோபமாகவே இருக்கின்றார். இந்நிலையில் பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் மனைவியை வெளியே காட்டாமல் இருந்து வந்தார்.
பின்பு பிரபுதேவா 50வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதே இவர்களின் திருமண தகவல் வெளியே தெரியவந்தது.
அவ்வப்போது தனது முதல் மனைவிக்கு பிறந்த மகன்களுடன் நேரத்தையும் செலவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |