திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா தற்போது புதிய சொகுசு கார் வாங்கியுள்ள நிலையில், இதன் விலை தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
பிரபுதேவா
நடனக் கலைஞராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, நடன இயக்குநராக மாறி, பின்னர் நடிகர், இயக்குநர் என பல தளங்களில் வெற்றியை ருசித்தவர் நடிகர் பிரபுதேவா.

தற்போது அவரது நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் ரிலீசுக்கு தயாராகவும், படப்பிடிப்பு நிலையிலும் இருக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
விலை விபரம்
தற்போது இந்திய திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் எலக்ட்ரிக் கார்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைப்பதாலும் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர்.

அந்த வரிசையில், பிரபுதேவா தற்போது புதிய எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அவர் தேர்வு செய்திருப்பது MG M9 Presidential Limousine எனப்படும் சொகுசு எலக்ட்ரிக் மாடல் கார் ஆகும். இந்த காரின் ஷோரூம் விலை சுமார் ₹75.90 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை சொகுசு அம்சங்களுக்காக பெயர் பெற்ற இந்த காரில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏழு ஏர்பேக் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 548 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்பதும் இந்த காரின் முக்கிய சிறப்பம்சமாகும்.

நீண்ட தூர பயணத்துக்கும், சொகுசு அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |