பிரபாஸ் பிரபல நடிகைக்கு கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்! வைரலாகும் புகைப்படங்கள்
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு இந்திய அளவில் மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் பிரபாஸ், சக கலைஞர்கள் மீதான தனது அன்பை காட்டும் தனித்துவமான பண்பிலும் அவ்வப்போது இணைத்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.
அவருடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளுக்கு விதவிதமான உணவுகளை அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்துவது பிரபாஸின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடிகை இமான்வியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் செய்துள்ள செயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் பிரபாஸ்
‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து, அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக, பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் தெலுங்கு திரையுலகைத் தாண்டி இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

இருப்பினும், ‘பாகுபலி’ ஏற்படுத்திய பிரம்மாண்டமான தாக்கத்தையும் வெற்றியையும் தொடர்ந்து வெளியான படங்களால் மீண்டும் அதே அளவுக்குப் பெற முடியவில்லை என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும், பிரபாஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.
சக கலைஞர்களுக்கு உணவு அனுப்பும் பழக்கம்
நடிகர் பிரபாஸின் மற்றொரு சிறப்பம்சம், தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களிடம் அவர் காட்டும் அன்பு. குறிப்பாக, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை அதிக அளவில் அனுப்பி வைத்து மகிழ்ச்சியடையச் செய்வது அவரது வழக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்புத் தளத்தில் சக நடிகர்களுடன் அன்பாகப் பழகுவதோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறிய செயல்கள் மூலமாகவும் தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.இதனால், அவருடன் பணியாற்றும் பலரும் அவரது விருந்தோம்பல் குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.
நடிகை இமான்விக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘Fauzi’ திரைப்படத்தில் நடிகை இமான்வி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இமான்வியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் அவருக்கு ஏராளமான உணவு வகைகளை அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரபாஸ் அனுப்பி வைத்த உணவுப் பொருட்களைப் புகைப்படம் எடுத்த இமான்வி, அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்த அன்பான பரிசால் மகிழ்ச்சியடைந்த அவர், ‘இதயமும் வயிறும் நிரம்பிவிட்டது’ என்ற பொருள்படும் வகையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பிரபாஸுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
Heart and stomach forever full 🙈🫶🏻 Thank you #Prabhas gaaru ❤️ https://t.co/5bhuDxszXF
— Imanvi (@imanviactress) October 14, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |