பதறும் ரசிகர்கள்... படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார்! நடந்தது என்ன?
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நடிகர் பவர் ஸ்டார் தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.