ஆகஸ்டில் உருவாகும் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் : இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.
கிரகங்களின் இந்த இடமாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது அல்லது ஒரே ராசியில் ஒன்றுசேரும் போது பல்வேறு யோகங்கள் உருவாகின்றன.

அவற்றில் சில யோகங்கள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மங்களகரமான ராஜயோகங்களாகக் கருதப்படுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் புதன் கிரகம் கடக ராசியில் நுழைந்து, அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியன் மற்றும் குருவுடன் இணைகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் 'கஜலட்சுமி ராஜயோகம்', 'திரிகிரஹ யோகம்' மற்றும் 'புத ஆதித்ய ராஜயோகம்' ஆகிய மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன.
இந்த யோகங்களின் தாக்கம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் , நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை என்பவற்றில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என பார்க்கலாம்.
மிதுனம்

இந்த மூன்று ராஜயோகங்கள் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ராசி அதிபதியான புதனின் அருளால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய முன்னேற்றங்கள் கிடைக்கும்.
புத்திசாலித்தனமான முடிவுகள் நிதி வளர்ச்சியையும் மரியாதையையும் பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நிலம், சொத்து தொடர்பான நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். கடின உழைப்புக்கான பலன் கிடைத்து, உடல்நலக் குறைகளும் படிப்படியாக நீங்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டமான காலத்தைத் தொடங்குகிறது. புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் உயரும். பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். திருமண வாழ்க்கை இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும்.
வாழ்க்கைத்துணையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு உதவும். தொழிலில் வெற்றி, மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிதி உதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் சிறப்பான பலன்களை வழங்கும். நிதி நிலை மேம்பட்டு, வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
வெளிநாட்டு பயண வாய்ப்புகளும் உருவாகலாம். பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருந்து, மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |