90ஸ் கிட்ஸ்களை தூங்க விடாமல் துரத்திய பொட்டு அம்மன் பட வில்லன்: இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
பொட்டு அம்மன் திரைப்படத்தில் நடித்து எம்மை தூங்க விடாமல் பயமுறுத்திய வில்லன் 22 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து எல்லோரும் அசந்து போயிருக்கிறார்கள்.
பொதுவாகவே ஒரு திரைப்படம் என்றால் ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன் என எல்லோரும் சேர்ந்து இருந்தால் அந்தப் படம் மக்கள் மத்தியில் கொஞ்சம் பேசப்படும்.
அதுவும் ஒரு படத்தில் ஹீரோவிற்கு எந்த அளவு முக்கியம் உள்ளதோ அதே போல வில்லனுக்கும் முக்கியத்துவம் இருக்கும். வில்லன் என்றாலே கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்.
அதிலும் சில வில்லன்களைப் பார்த்தால் திட்டித் தீர்க்கும் ஜனங்களும் இருக்கின்றன. அவர்கள் சிலர் உருவங்களைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் அளவிற்கு இருப்பார்கள்.
பொட்டு அம்மன் பட வில்லன்
அந்தவகையில், பொட்டு அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் பயமுறுத்தியவர் தான் சுரேஷ் கிருஷ்ணா.
இவர் மலையாளத்தில் மிகப்பெரும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் 2000ஆம் ஆண்டு ரோஜா, சுவலட்சுமி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பொட்டு அம்மன். இந்தப் படத்தில் நம்மை பாத்ரூம் போகும் அளவிற்கு பயமுறுத்திய நடிகர் தான் வில்லன் சுரேஷ் கிருஷ்ணா.
அவர் கருப்பு உடையில் அரக்கன் போல் பற்களை காட்டி பயமுறுத்தியவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
இப்போது அவரின் புகைப்படத்தைப் பார்த்தால் அவரா இவர் என ஆச்சரியப்படுவீர்கள்.