தேவயானி தலையில் விழுந்த பேனர்.... பதறிப்போன அபார்ட்மெண்ட்! விறுவிறுப்புடன் புதுப்புது அர்த்தங்கள்
தேவயானி மற்றும் அபிஷேக் நடிப்பில் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள்.
கோலங்கள் தொடரின் வெற்றிக்கு பின் அபிஷேக்கும் தேவயானியும் இணைந்து நடிக்கும் இந்த சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சென்னை நகரத்தில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் கணவனை இழந்த தேவயானி மகனுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்க்க, மகனுக்கு திருமணம் ஆகி வந்த மருமகள் மட்டுமே தேவயானியின் உண்மையான கஷ்டத்தையும், விருப்பங்களையும் அறிந்து தேவயானிக்கு சப்போர்ட்டிவாக இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அவர் தலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்படுகின்றது.
இதனை பார்த்து அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் அனைவரும் அதிர்ந்து போகின்றனர். அபிஷேக் அவரின் கை குட்டையை கொடுக்கின்றார். அவருக்கு தேவையானி மீதான அன்பு மேலும் அதிகரிக்கின்றது.
ஆனால், இதுவரை வெறுப்புடன் இருந்த தேவயானிக்கு அவர் மீது அன்பு வருமா என்றுபது இனி தான் தெரியும். பார்க்கலாம் புதுப்புது அர்த்தங்களில் திருப்பங்கள் ஏற்படுமா என்று.