உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க!
உருளைக்கிழங்கு சமையல் என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் எப்போதும் உருளைக்கிழங்கு வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் நீண்ட நாள் சேமித்து வைக்கும்போது, உருழைக்கிழங்கானது அதன் புத்துணர்வை இழந்து படிப்படியாக முளைக்கத் தொடங்குகின்றன. இதையடுத்து உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் ப்ரெஷாக இருக்க, என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
உருளைக்கிழங்கை குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
* ஒரு சிலர் குளிர்சாதன பெட்டியில் உருளைக்கிழங்கை வைப்பார்கள். ஆனால் அது தவறாது. குளிர்சாதன பெட்டியில் இருக்கும் காலநிலை உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்ற காரணமாகிறது.
இதன் விளைவாக இனிப்பு சுவை மற்றும் சமைக்கும்போது நிறமாற்றம் ஏற்படும். எனவே உருளைக்கிழங்கை வெளியில் வைத்தாலே போதுமானது.
* உங்கள் வீட்டில் அதிக வெப்பமான பகுதிகள் மற்றும் சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களில் உருளைக்கிழங்குகளை சேமித்து வைப்பதை தவிர்க்கவும். வெளிச்சம் குறைந்த இருண்ட இடத்தில் சேமித்து வைக்கலாம்.
* உருளைக்கிழங்கின் தோலில் பச்சையாக நிறமாறுவதற்கு சோலனைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குவது தான் காரணம், உருளைக்கிழங்கை அதிக வெளிச்சத்தில் வைத்தால் இது இயற்கையான எதிர்வினையால் இப்படி மாறுகிறது.
சோலனைன் உருளைக்கிழங்கில் கசப்பான சுவையை உருவாக்குகிறது, மேலும் இதனை அதிக அளவில் சாப்பிட்டால் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உருளைக்கிழங்கில் லேசாக பச்சை நிறம் இருந்தால் சமைத்து சாப்பிடுவதற்கு முன் தோலின் பச்சை பகுதிகளை வெட்டி விடுங்கள். அதிகமாக இருந்தால் அதனை பயன்படுத்த வேண்டாம்.
* உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் பிரெஷ்சாக இருக்க துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகித பைகளில் வைக்கலாம். நீங்கள் உருளைக்கிழங்குகளை வாங்கி வந்தவுடன் அவற்றை கழுவி விட்டு சேமித்து வைக்க கூடாது. ஈரப்பதம் அவை விரைவில் கெட்டுப்போக வழிவகுக்கும்.
* உருளைக்கிழங்கில் சிறு சிறு முளைகள் இருந்தால், உருளைக்கிழங்கு வளர ஆரம்பிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் முளைகளை வெட்டி விடுங்கள். முடிந்தவரை முளைப்பதற்கு முன்னர் சாப்பிடுவது நல்லது.
இதற்கு மிகவும் குளிர்ச்சியான இடங்களில் உருழைக்கிழங்குகளை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.